Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காடுகளை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!

In இலங்கை
Updated: 13:42 GMT, Jan 10, 2018 | Published: 13:42 GMT, Jan 10, 2018 |
0 Comments
1089
This post was written by : Vithushagan

புதிதாக 1 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் காடு வளர்க்கப்படும் என்று வன பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் அனுர சத்தரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வனப்பாதுகாப்பு கட்டளைகள் சட்டம் திருத்தியமைக்கப்படும். தனியார் துறையினதும் மக்களினதும் ஆதரவு இந்த வேலைத்திட்டத்திற்குப் பெற்றுக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

காடுகளை அழிப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 29.7 சதவீதமான பகுதி காடுகளாகும்.

இந்த வனங்களின் எல்லைப்பகுதிகளை அடையாளமிட்டு அவற்றைப் பாதுகாப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென்று பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg