Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டினை கட்டியெழுப்பும் அரசாங்கம் ஒன்று வேண்டும்: ஜனாதிபதி!

In இலங்கை
Updated: 17:18 GMT, Jan 10, 2018 | Published: 17:18 GMT, Jan 10, 2018 |
0 Comments
1287
This post was written by : Vithushagan

மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு நாட்டினை கட்டியெழுப்பும் அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த நாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் கீழேயே கட்டியெழுப்பபட்டுள்ளது. இந்த வரலாற்றை யாராலும் நிராகரிக்க முடியாது. கடந்த காலத்தில் ஊழல்இ குற்றம், சர்வாதிகாரம் ஆகிய பாதைகளில் பயணித்த இந்நாட்டை நாம் முன்வந்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

‘இப்போது, மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு நாட்டினை கட்டியெழுப்பும் அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்த வேண்டும். நாட்டினை நேசிக்கும் மக்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg