Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் வைத்தியசாலையில் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரிக்கை

In இலங்கை
Updated: 03:17 GMT, Jan 11, 2018 | Published: 03:14 GMT, Jan 11, 2018 |
0 Comments
1083
This post was written by : Elakkiya
1 (4)

மன்னார் பொது வைத்தியசாலையில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு வைத்தியசாலை நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் நோயாளர் விடுதி-2 இல் காணப்படும் மலசலகூடம் அசுத்தமான நிலையில் எப்போதும் காணப்படுவதாகவும் இருப்பினும் அதனையே விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த நோயாளர் விடுதி தற்காலிக விடுதியாக காணப்படுகின்ற போதிலும் அதிகளவான நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதாகவும் இதனால் பெரும் அசளகரியங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நோயாளர் விடுதி-3 மற்றும் 4 ற்கு செல்லும் பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கழிவு நீர் தேங்கி நிற்பதுடன் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், வைத்தியசாலையில் நிலவும் இத்தகைய அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக அவதானம் செலுத்தி நிவர்த்தி செய்வதுடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

12 5 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)