Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் சமவாயத்தை இலங்கை விரைந்தேற்க வேண்டும்

In இலங்கை
Updated: 06:49 GMT, Jan 11, 2018 | Published: 03:18 GMT, Jan 11, 2018 |
0 Comments
1191
This post was written by : Varshini

கொத்துக்குண்டு பாவனையை முற்றாக தடை செய்யும் 2008ஆம் ஆண்டு சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டுமென, கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான இலங்கை பிரசாரக் குழுவினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுவரை 119 நாடுகள் குறித்த சமவாயத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட இக்குழுவினர், இலங்கையும் இதனை விரைவாக ஏற்றுக்கொள்வது அவசியமென வலியுறுத்தினர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது, மனித குலத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பல ஆதாரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு இலங்கை உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட எண்ணிலடங்காத கண்ணிவெடிகளால் மக்கள் தற்போதும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், நிலக்கண்ணிவெடிகளை தடைசெய்யும் ஒட்டாவா ஒப்பந்தத்தில் இலங்கை இணைய வேண்டுமென யுத்தம் நிறைவடைந்த பின்னர் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

அதன் பயனாக ஒட்டாவா ஒப்பந்தத்தை ஏற்கும் 163 நாடாக இலங்கை, கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg