Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்து அணிக்கெதிரான பாகிஸ்தான் ரி-ருவென்ரி அணி அறிவிப்பு!

In கிாிக்கட்
Published: 04:09 GMT, Jan 11, 2018 |
0 Comments
1165
icon_com
This post was written by : Anojkiyan
CRICKET-WT20-2016-BAN-PAK

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகளை கொண்ட, ரி-ருவென்ரி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஹமட் சப்ராஸ் தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷெஷாட் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேலும் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டடுள்ள வேகப்பந்து வீச்சாளர் இமாட் வசிம் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் நவாஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இதுதவிர உமர் அமீன் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி விபரம்: சப்ராஸ் அஹமட், பஹர் சஹமான், அஹமட் ஷெஷாட், பாபர் அசாம், சொயிப் மலிக், ஹரிஸ் சோஹைல், மொஹமட் ஹபீஸ், மொஹமட் நவாஸ், சதாப் கான், பஹீம் அஸ்ரப், உமர் அமீன், அமீர் யாமின், மொஹமட் அமிர், ஹசான் அலி, ருமான் ரயீஸ்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டி, எதிர்வரும் 22ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)