Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத கடத்தல்களை நிறுத்த ட்ரம்பின் அதிரடி

In
Published: 04:52 GMT, Jan 11, 2018 |
0 Comments
1171
This post was written by : Risha

அமெரிக்காவிற்குள் முன்னெடுக்கப்படும் ஆபத்தான சட்டவிரோத கடத்தல்களை கண்டறிந்து நிறுத்தவதற்கு, எல்லை ரோந்து படையினருக்கு அதிகாரங்களை வழங்கும் வகையிலான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ட்ரம்ப் குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

இதன்மூலம், பயணிகள், அவர்களின் பொதிகள் மற்றும் அஞ்சல்கள் என்பவற்றை சோதிக்கும் வகையிலான இரசாயன திரையிடல் சாதனங்களை எல்லை படையினர் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு கூடுதலாக 9 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் ஓபியோயிட் போதைப்பொருள் பாவனையால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்ற நிலையில், இந்நடைமுறையானது அதனை எதிர்த்து போராடுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ”அமெரிக்காவின் அஞ்சல் முறைகளை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் எமது மக்களை கொலை செய்கின்றனர்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், இத்தருணத்தில் எல்லை மற்றும் சுங்க பாதுகாப்பு அத்தியவசியமானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)