Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம்: சட்டமா அதிபர் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 08:48 GMT, Jan 11, 2018 | Published: 04:56 GMT, Jan 11, 2018 |
0 Comments
1373
This post was written by : Elakkiya

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம் என சட்டமா அதிபர் தனது கருத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

எத்தனை ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிப்பிராயம் கோரியிருந்த நிலையில் அது குறித்து ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது.

பிரதம நீதியசர் பிரியசாத் டெப் தலைமையிலான இந்த குழு இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றில் கூடி ஆராய்ந்து வருகின்ற நிலையில் சட்டமா அதிபர் மேற்படி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

மைத்திரியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா? ஆறு ஆண்டுகளா?- தீர்ப்பு இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பது குறித்த தீர்மானம் இன்று வெளியிடப்படவுள்ளது.

எத்தனை ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிப்பிராயம் கோரியிருந்த நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக நேற்று ஐவ­ர­டங்­கிய நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டது.

பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலைமையிலான இந்த குழு இன்று முற்பகல் 11 மணியளவில் உயர் நீதிமன்றத்தில் கூடி இது தொடர்பாக ஆராய்ந்து   இன்றைய தினமே அபிப்பிராயத்தை வெளியிடவுள்ளது.

இதன்போது  சட்டமா அதிபர், அர­சியல் விவ­காரம் தொடர்பிலான உயர் சட்டவாதிகள், சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர், செய­லாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் பதிவுசெய்யப்படவுள்ளன.

இவ்வாறு பதிவு செய்யப்படும் கருத்துக்களை பிர­தம நீதி­யரசர் தலை­மை­யி­லான ஐவர் கொண்ட குழாம் ஆராய்ந்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 5 வரு­டங்­களா அல்லது 6  வரு­டங்­களா என தீர்­மா­னிக்­க­வுள்­ளது.

பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலைமையிலான இக்குழுவில் சிரேஷ்ட நீதி­ய­ரசர் ஈவா வண­சுந்­தர,  நீதி­ய­ரசர் புவ­னேக அனுவி­ஹார, நீதி­யரசர் கே.ரி.சித்­ர­சிறி, நீதி­ய­ரசர் சிசிர டி ஆப்றூ ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

மைத்திரிபால சிறிசேன, கடந்த 2015 ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்பின் 32 (1) ஆம் சரத்தின் பிர­காரம் ஜனாதிபதியாக பதிவேயேற்றுக் கொண்டார்.

குறித்த சரத்திற்கு அமைய தனது பதவிக்காலம் 6 வரு­டங்கள் என சுட்டிக்காட்டிய மைத்திரி, 2015 மே 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியல் திருத்தத்திற்கு அமைய, ஜனாதிப­தியின் பதவிக்காலம் 5 வரு­டங்கள் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி­வித்­துள்ளார்.

இதனால், 19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பதவிக்கு வந்த தன்னால், அரசியலமைப்பின் பழைய ஏற்பாடுகளுக்கு அமைய 6 வருடங்கள் பதவியில் நீடிக்க முடியுமா அல்லது புதிய திருத்தத்திற்கு அமைய 5 வருடங்கள் மட்டுமே பதவி வகிக்க வேண்டுமா என உயர் நீதிமன்றின் அபிப்பிராயத்தை கோரியிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையிலேயே இன்றைய தினம் விசேட நீதியரசர்களைக் கொண்ட குழு கூடி, அது குறித்து தமது அபிப்பிராயத்தை வெளியிடவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg