Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலிபோர்னியாவில் பேரழிவை ஏற்படுத்திய மண்சரிவு: உயிரிழப்பு அதிகரிப்பு

In
Updated: 05:21 GMT, Jan 11, 2018 | Published: 05:21 GMT, Jan 11, 2018 |
0 Comments
1274
This post was written by : Risha

அமெரிக்காவின் தெற்குக் கலிபோர்னிய மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, காணாமல் போனாரின் எண்ணிக்கையும் 17ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அரசாங்க அதிகாரியொருவர் நேற்று (புதன்கிழமை) குறிப்பிட்டார்.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் சுமார் 500 மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மோப்ப நாய்களின் உதவியுடன் நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஒரு நீண்ட கடினமான பயணமாக அமையும் என உணர்வதாக குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

அனர்த்தத்தின் எதிரொலியாக கடலோரப் பகுதியிலுள்ள பாரிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் இருவழிப் போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ள நிலையில், குறித்த பாதை எதிர்வரும் வாரம்வரை திறக்கப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்குக் கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவரும் நிலையில், அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதiனைத் தொடர்ந்து, கலிபோர்னியாவின் கிழக்கு சாண்டா பார்பராவிலுள்ள ரோமியோ கன்யோனில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாரிய மண்சரிவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

_99533649_montecitoepa

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg