Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

In இலங்கை
Updated: 08:37 GMT, Jan 11, 2018 | Published: 05:39 GMT, Jan 11, 2018 |
0 Comments
1262
This post was written by : Elakkiya

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள இந்த அலுவலகம் நேற்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாநகரசபையின் பிரதான வேட்பாளர் எஸ்.வசந்தக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் செயலாளர் வ.கமலதாஸ் மற்றும் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன், “இந்த தேர்தலானது மிகவும் சாதகமாக அமைகின்றது. செலவு குறைந்ததாகவும் பிரசாரங்களை கிராம மட்டங்களில் செயற்படுத்த கூடியதாகவும் அமைந்துள்ளது. தேர்தல் சட்டமூலங்களுக்கு அமைவாக தேர்தல் பிரச்சாரங்களுக்கு விதிமுடுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கு அமைவாக பிரசாரங்களில் ஈடுபட்டு எமது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)