Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி: ஒப்பந்தம் கைச்சாத்து

In இலங்கை
Updated: 05:48 GMT, Jan 11, 2018 | Published: 05:48 GMT, Jan 11, 2018 |
0 Comments
1174
This post was written by : Varshini

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக, இந்தியா 690 கோடி இலங்கை ரூபாவை வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் புதுடெல்லியில் நேற்று (புதன்கிழமை) சைச்சாத்திடப்பட்டது.

இலங்கை சார்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவும் இந்தியாவின் சார்பில் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் நிர்வாகப் பணிப்பாளர் டேவிட் ரஸ்ஹின்ஹாவிற்கும் இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கொழும்பிலுள்ள தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம், கடந்த 2011ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் எக்ஸிம் வங்கியிலிருந்து இதற்கான நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் அனுமதி கிடைக்கப்பெற்றது.

தற்போது குறித்த நிதியை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், குறித்த வேலைத்திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு துறைமுகங்கள் அதிகாரசபைக்கு வழங்கப்படவுள்ளது.

india sl sign (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg