Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவர்கள் தாக்கியதாலேயே திருப்பித் தாக்கினோம்! – ஐ.தே.க. உறுப்பினர்கள் விளக்கம்

In இலங்கை
Updated: 06:54 GMT, Jan 11, 2018 | Published: 05:53 GMT, Jan 11, 2018 |
0 Comments
1263
icon_com
This post was written by : Elakkiya
SLPF1121

மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கியதனாலேயே, தாமும் அவர்களை திருப்பித் தாக்கியதாக தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிணைமுறி விசாரணை அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் நேற்றைய தினம் குழப்ப நிலை ஏற்பட்டதுடன், ஆளும் ஐ.தே.க. உறுப்பினர்களுக்கும் கூட்டு எதிரணி உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பும் ஏற்பட்டது.

இந்த அசம்பாவிதம் தொடர்பாக ஐ.தே.க. உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி, எஸ்.எம். மரிக்கார் மற்றும் சமிந்த விஜேசேகர ஆகியோர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கை தொடர்பாக அறிந்து கொள்ள தாமும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் நாடாளுமன்றில் இது குறித்து சண்டையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.

எனினும், அறிக்கையைக் காரணம் காட்டி தம்மைத் தாக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் ஆகையால் தாமும் திருப்பித் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)