Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு

In இலங்கை
Updated: 09:15 GMT, Jan 11, 2018 | Published: 06:13 GMT, Jan 11, 2018 |
0 Comments
1115
This post was written by : Elakkiya

தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் இம் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதிவரை தேசிய நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்லின தன்மையை ஏற்று இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒருமித்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, “இலங்கையில் தேசிய ஒருங்கிணைப்பு என்ற எண்ணக்கருவை சாத்தியமாக்குவதற்கான பாரிய முயற்சியாக இன, மத ,பிரதேச மற்றும் மொழி தொடர்பாக பல்வகைத்தன்மைக்கு மதிப்பளித்து அனைவரும்  இலங்கையர் என்ற ரீதியில் பிரகடனத்தை மேற்கொள்வோம். நாம் அனைவரும் புரிந்துணர்வு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் வரையறையற்ற சகோதரத்துவத்தின் ஊடாக இலங்கையின் சகல குடிமக்கள் மற்றும் சமுதாயங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டை உருவாக்கும் உன்னத நோக்குடன் செயலாற்றுவோம். இந்த மேலான குறிக்கோளுக்காக நாம் ஒவ்வொருவரும் கைகோர்த்துக் கொண்டு அதனூடான சுபீட்சமான தேசத்துக்காகவும் இலங்கையர் என்ற அடையாளத்துக்காகவும் அடித்தளம் இடுவோம் என உறுதிபூணுவோம்” என்று  சத்தியபிரமாணம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணத்தை ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)