Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெனீவாவிற்கான அடுத்த இலங்கை தூதுவராக ஏ.எல்.ஏ.அஸீஸ்?

In இலங்கை
Updated: 09:29 GMT, Jan 11, 2018 | Published: 06:20 GMT, Jan 11, 2018 |
0 Comments
1197
icon_com
This post was written by : Varshini
on60

ஜெனீவாவிற்கான இலங்கையின் அடுத்த வதிவிட பிரதிநிதியாக, ஒஸ்ரியாவிற்கான தற்போதைய இலங்கை தூதுவர் ஏ.எல்.ஏ.அஸீஸை நியமிக்கப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

ஜெனீவாவிற்கான இலங்கையின் தற்போதைய நிரந்தர விதிவிடப் பிரதிநிதியான ரவிநாத ஆரியசிங்கவின் மூன்று வருட பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்திருந்த நிலையில், அவருடைய பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி  வரை நீடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், குறித்த பதவிக்கு ஒஸ்ரியாவுக்கான தற்போதைய தூதுவரை நியமிப்பதற்கு வெளிவிவகார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட குழு விரைவில் கூடி இதனை உத்தியோகபூர்வதாக அறிவிக்கவுள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டதொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், அடுத்த தூதுவரை நியமிப்பதற்கான செயற்பாடுகள் துரிதமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 37ஆவது ஐ.நா. கூட்டத்தொடரின் போது தாம் இரு நாட்களே பங்குபற்றவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து புதிய தூதுவரே பங்கேற்பார் என்றும் ஏற்கனவே ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)