Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்பான திறமைகளைக் கொண்டிருக்கும் வீர, வீராங்கனைகளுக்கு அரச வேலைவாய்ப்பு!

In கிாிக்கட்
Published: 06:33 GMT, Jan 11, 2018 |
0 Comments
1093
This post was written by : Anojkiyan
daya

விளையாட்டில் சிறப்பான திறமைகளைக் கொண்டிருக்கும் வீர, வீராங்கனைகளுக்கு அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க அரசு தீர்மானித்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“சர்வதேச போட்டிகளில் இலங்கையிலிருந்து வீர, வீராங்கனைகளை பங்குபற்றச் செய்யும் முயற்சிகளும் அவர்களுக்கான பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இதில் கலந்துகொள்ளும் வீர, வீராங்கனைகள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் பட்சத்தில், அவர்கள் உரிய தகுதிகளைக் கொண்டிருந்தால் அரச நிறுவனங்களில் பணி நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)