Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் சிறந்த ராணுவ உபகரணங்களை அமெரிக்காவே தயாரிக்கிறது: ட்ரம்ப்

In
Published: 06:58 GMT, Jan 11, 2018 |
0 Comments
1148
This post was written by : Risha

உலகிலேயே சிறந்த தரமான ராணுவ உபகரணங்களை அமெரிக்கா தயார் செய்து வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நோர்வே பிரதமருடனான சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின்போது பல்பேறு பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த ட்ரம்ப், ”நாம் நோர்வேயுடன் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். அந்தவகையில், நோர்வே, அமெரிக்காவின் சிறந்த வாடிக்கையாளராகவும், நண்பனாகவும் திகழ்கிறது. அதற்கு நோர்வேக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

தொடர்ந்து அமெரிக்காவின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த நோர்வே பிரதமர், ”நேட்டோவுக்குள் நோர்வேயுடன் மிக நெருங்கிய நட்பு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. ராணுவத்துறையிலும் அமெரிக்கா நோர்வேக்கு பல பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதேவேளை, இரு நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பும் சிறந்து விளங்குகிறது” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)