Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய இளவரசர் வருகை: உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது உயர்ஸ்தானிகராலயம்!

In இலங்கை
Updated: 08:28 GMT, Jan 11, 2018 | Published: 08:28 GMT, Jan 11, 2018 |
0 Comments
1206
This post was written by : Arul Jesu

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பிரதம விருந்தினராக பிரித்தானியாவின் இளவரசர் எட்வேர்ட்டும் அவரது பாரியாரியாரும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே இளவரசர் எட்வேர்ட் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தகவலை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக இளவரசர் எட்வேர்ட்டுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அழைப்பை ஏற்று பிரித்தானிய இளவரசர் இலங்கை சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

பிரித்தானிய இளவரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, பிரமாண்டமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg