Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை நீடிக்க முனைவதாக பஷில் குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 10:32 GMT, Jan 11, 2018 | Published: 06:48 GMT, Jan 11, 2018 |
0 Comments
1171
icon_com
This post was written by : Varshini

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க முனைவதாக முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பஷில் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனாதிபதி ஆறு வருடங்கள் பதவியில் நிலைத்திருக்க முடியுமா என உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோரியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு, நல்லாட்சி அரசாங்கமானது நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் இது பெரும் சாதனை என தம்பட்டமடித்துக் கொண்டதாகவும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் வினைத்திறனற்ற ஆட்சியின் காரணமாக சாலாவ முதல் மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச்சரிவு உட்பட பல்வேறு அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க நேரிட்டதாக குற்றஞ்சாட்டிய பஷில் ராஜபக்ஷ, மக்களது நாளாந்த வாழ்க்கை தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கான பதில்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்குவார்கள் என பஷில் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)