Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை

In இலங்கை
Updated: 06:52 GMT, Jan 11, 2018 | Published: 06:52 GMT, Jan 11, 2018 |
0 Comments
1421
This post was written by : Elakkiya

மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் காவலாளி இரவு 7.30 மணியளவில் வெளியில் சென்றிருந்த நிலையில் ஆலயத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த மேற்படி உண்டியல் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்டியலுக்கு மூன்று பூட்டுகள் போடப்பட்டிருந்த நிலையில் குறித்த மூன்று பூட்டுகளும் உடைக்கப்பட்டுள்ள போதிலும் பணம் எதுவும் திருடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் வெளியில் சென்ற காவலாளி ஆலயத்தினுள் வருவதை அவதானித்த திருடர்கள் பணத்தினை எடுக்காது தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களிலும் இதுபோன்று மூன்று தடவைகள் பூட்டு உடைக்கப்பட்ட போதிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம் திருட்டுப் போகவில்லை என ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg