Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து ஊழியர்களின் மனு விசாரணைக்கு: தொடரும் போராட்டம்!

In இந்தியா
Updated: 07:01 GMT, Jan 11, 2018 | Published: 07:01 GMT, Jan 11, 2018 |
0 Comments
1187
This post was written by : Kemasiya

தமிழகத்தின் அரச போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி, ஊழியர் சங்கத்தினர் தாக்கல் செய்துள்ள மனு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஊழியர்கள் தாக்கல் செய்துள்ள மனுவினை உடனடியாக விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம்,  இன்று மாலை 2.30மணிக்கு குறித்த மனு தொடர்பில் மேலதிக விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில்,

“எமது கோரிக்கைகளை முன்வைத்து தாக்கல் செய்துள்ள மனுக் குறித்து விசாரணை முடிந்த பின்னர், தீர்ப்பை கருத்தில் கொண்டு எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கவுள்ளோம். அத்துடன் சிறந்த தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். மூன்று மாத காலத்திற்குள் முழுமையான தீர்வை நீதிமன்றம் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

ஊதிய அதிகரிப்பு கோரி, தமிழகம் முழுவதும் அரச போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4ஆம் திகதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg