Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற குழப்பம் – காணொளி ஆதாரத்துடன் விசாரணை  

In இலங்கை
Updated: 07:00 GMT, Jan 11, 2018 | Published: 06:59 GMT, Jan 11, 2018 |
0 Comments
1144
This post was written by : Elakkiya

நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பான  விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இதன்போது,  நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் குழப்ப நிலைமைகளின் போது பதிவான காணொளி காட்சிகளைப் பெற்று, அதனை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூச்சல் குழப்பங்களுடன் நிறைவடைந்த நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், சபையினுள் உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக  இதுவரை எந்தவொரு எழுத்து மூலம் முறைப்பாடும் செய்யப்படவில்லை எனக் குறிப்பிடும் திலங்க சுமதிபால,  இந்த சம்பவம் குறித்து கட்சித் தலைவர்கள் சிலர் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக நாடாளுமன்ற குழப்பங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg