Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்டிக்- பால்டிக் அரச பிரதிநிதிகளுடன் சீன ஜனாதிபதி சந்திப்பு

In
Updated: 07:21 GMT, Jan 11, 2018 | Published: 07:21 GMT, Jan 11, 2018 |
0 Comments
1289
This post was written by : Risha

நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளின் பிரதிநிதிகளை, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், பீஜிங்கில் நேற்று (புதன்கிழமை) சந்தித்தார்.

சீனாவிற்கும் நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளுக்கும் இடையிலான வளர்ச்சியடைந்துவரும் அரசியல் பரஸ்பர நம்பிக்கையின் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பமாக இந்த சந்திப்பை மதிப்பிடுவதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சீனாவுடனான நட்புறவை மேலும் புதுப்பிக்கவும், சீனாவுடனான ஒத்துழைப்பை ஊக்கப்படுத்தவும் தாம் தயாராக இருப்பதாக நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய சந்திப்பில் பின்லாந்து, நோர்வே, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சுவீடனின் துணை சபாநாயகர் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg