Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை தீ விபத்து: உணவக உரிமையாளர்கள் கைது

In இந்தியா
Updated: 07:30 GMT, Jan 11, 2018 | Published: 07:30 GMT, Jan 11, 2018 |
0 Comments
1160
This post was written by : Kemasiya

மும்பை கமலா மில் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டடத்தொகுயில் உள்ள ‘ஒன் உணவக’ உரிமையாளர்களான ஜிகார் சங்வி மற்றும் கிரிபேஷ் சிங்வி ஆகியோர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தையடுத்து குறித்த இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்களை தேடிக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த  2017ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 28ஆம் திகதி ஏற்பட்ட இத்தீவிபத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்ததோடு,  55 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg