Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களின் எழுச்சி சிலருக்கு கசப்பது ஏன்?

In
Updated: 10:23 GMT, Jan 11, 2018 | Published: 08:15 GMT, Jan 11, 2018 |
0 Comments
1450
This post was written by : srikkanth

உள்ளுராட்சி மன்ற தேர்தல் இவ்வருடம் மாசி மாதம் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் கிட்டத்தட்ட 16மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்தமுறை ஜேர்மனி போன்ற நாடுகளைப் போன்று, கலப்பு முறை தேர்தலாக நடைபெறவுள்ளது.

இதுவே இலங்கை வரலாற்றில் மாபெரும் தேர்தலாக இருக்கும். 60 வீதமான உறுப்பினர்கள் வட்டார முறையிலும் 40 வீதமானவர்கள் விகிதாசார முறையிலும் தெரிவாவர்.

இதைவிட ஒவ்வொரு பிரதேச சபையின் மொத்த ஆசனங்களில் 25 வீதம் ஆசனங்கள் பெண்களுக்குக்காக ஒதுக்கபட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு 2016 அம் ஆண்டு 16 ஆம் இலக்க தேர்தல் திருத்த சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

ஆகவே, கட்சிக்கு வாக்கு அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கான ஒதுக்கீட்டு முறையிலிருந்து பெண்கள் தெரிவாக்கூடிய சந்தர்ப்பம் ஒவ்வொரு கட்சிக்கும் அதிகரிக்கும்.

சமூகத்தில், பெண்கள் அரசியலுக்கு வருவதைப்பற்றியும் இந்த ஒதுக்கீடு முறை பற்றியும் பலவிதமான கருத்துக்களும் அபிப்பிராயங்களும் நிலவுகின்றன. கூடவே தேர்தலில் களமிறங்கிய பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ஆங்காங்கே உருவெடுக்க தொடக்கி இருப்பதையும் ஊடங்களில் அவதானிக்க கூடியதாக உள்ளது .

அவற்றில் சில கருத்துக்களை உதாரணத்திற்கு பார்ப்போம்,

தேர்தலில் விசேட ஒதுக்கீடு தேவை தானா?

“ஆணுக்கு பெண் சமன் என்று கோஷம் போட்டுகொண்டு ஏன் ஒதுக்கீடு கேட்கின்றீர்கள்? நீங்கள் ஆணுக்கு பெண் சமனேன்றால் போட்டி போட்டு வெல்லாம் தானே” என்று ஒரு சாரார் விசனம் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் பங்களிப்பு அரசியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாலும்,  பெண்களின் பங்களிப்பு பற்றி சரியாக கட்சிகள் கவனம் செலுத்தததினாலும், பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றி அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ளாததாலும் சர்வதேச சட்டங்களுக்கும் (மகளீருக்கு எதிரான சகல பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான சமவாயம்) தராதரங்களுக்கும் இணங்க இலங்கை ஒழுக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் பெண்களை ஊக்கபடுத்த கொண்டுவரப்பட்ட ஒரு ஊக்கி ஆகும்.

உதாரணத்திற்கு சொல்வதானால், நலிந்த ஆனால் நன்றாக ஒடக்கூடிய ஒரு மாணவனை பத்து அடி முன்னே நிறுத்தி ஓட்டப்பந்தயத்தில் ஓட விடுவது போன்றது. அவன் நன்றாக ஓடத்தொடந்கியதும் சில வருங்களுக்கு பின் இந்த சலுகை ரத்து செய்யப்படும். இவ்வாறே இந்த 25 வீத ஒதுக்கீட்டு முறையும் பெண்கள் அரசியலில் வலுப்பெற்றவுடன் நீக்கப்படும். இதேபோல் சர்வதேச மேலைத்தேய நாடுகள் பெண்களை அரசியலுக்கு கொண்டு வர பல முறைகளை கையாண்டு வருகின்றன. வெற்றியும் பெற்று உள்ளன.

தகுதியான – படித்த – நல்ல பெயரெடுத்த பெண்கள் வரவேண்டும் 

இது தேர்தலில் களமிறங்கும் சகலரிடமும் எதிர்பார்க்கபடவேண்டும். பெண்கள் என்றவுடன் இவ்வாறான விடயங்களை முன்னிறுத்துவது கேலிக்குரிய விடயம். இதுதவிர இலங்கையில் பாராளுமன்றதிலிருந்து மாநகரசபைவரை உள்ள ஆண் அரசியல்வாதிகள் இவ்வாறான எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தவர்களா என்பதை கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டும்.

படித்தவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும் என்பது ஏற்று கொள்ள முடியாத விடயம். காரணம், இந்தியாவில் பஞ்சாயத்து முறையில் அரசியல் செய்யும் பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். ஆனால்,  நன்றாக அர்பணிப்புடன் அரசியல் செய்ய தெரிந்தவர்கள். இதே போல் நேபாளத்தில் இருக்கும் பெண்கள்கூட கைநாட்டாக இருந்து அரசியல் செய்யும் பெண்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.

வன்முறை அடாவடி ஊழல் செய்யும் பெண்களுக்கு பெண்கள் என்பதற்காக வாக்குப்போட முடியாது.

உண்மை ஆனால் இதையையே செய்யும் ஆண்களுக்கு வாக்கு போடலாமா என்ற கேள்வி இங்கு பிறக்கிறதல்லவா? வன்முறை அடாவடி ஊழல் சட்டத்தை கையிலெடுத்தல் போன்றவற்றை எவரும் செய்யலாகாது. ஆண் பெண் பேதம் தேவை அற்றது. வன்முறை என்பது உடல் மூலக்கூறு சார்ந்த குணம் அல்ல,  ஆகவே வன்முறையற்ற  தேர்தல் எமக்கு வேண்டும்.

அரசியலில் இறங்கி விட்டால் பெண்ணால் குடும்பம் சீரழிந்து விடும், பிள்ளைகளின் எதிர்காலம் கெட்டுவிடும்.

குடும்பம் – பிள்ளை வளர்ப்பு – கல்வி – சமையல் என்பது தாய் தந்தை இருவரினதும் தலையாய கடமை. இதை பெண்ணின் தலையில் மட்டுமே கட்டி விடுவது சிறந்ததல்ல. இன்று தந்தை மட்டும் வருவாயை பெற்று தருவதில்லை.  பெண்ணும் குடும்பத்துக்கு தேவையான வருவாயை பெறுவதற்காக வேலை செய்து சம்பாதிக்கிறாள். ஆகவே, சமையல் வேலைகளை – பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தல் போன்ற பொறுப்புக்களை இருவரும் பகிர்ந்து கொள்ளல் அவசியமாகின்றது. இவ்வாறே புலம்பெயர் தேசத்தில் எம்மவர் வாழ்கின்றனர் என்பதை மறந்துவிடலாகாது.

அது மட்டுமல்ல வீட்டை சரியான முறையில் பெண்ணால் நிர்வாகத்தினை நடத்த முடியும் என்று நம்பும் நாம் அதே பெண்ணால் தன் சமூகத்துக்காக தனது பிரதேசத்தையும் நிர்வக்கிக்க முடியும் என்பதை மறக்கலாகாது.

பெண்கள் தங்கள் நடத்தையில் உள்ள குறைகளை அதிகாரத்தால் மறைக்க அரசியலுக்கு வருகின்றனர்.

நடத்தை ஒழுக்கம் போன்றவை ஆணைவிட பெண்ணிலேயே அதிகம் திணிக்கப்பட்டுள்ளது.  ‘ஆண் சேறு கண்டால் மிதிப்பான் தண்ணீரை கண்டால் கழுவுவான்’ என்ற பல மொழிகளும் ஆணுக்கு சார்பாகவே சமூகத்தில் உள்ளது .

நடத்தை – ஒழுக்கம் – பண்பு போன்றவை எல்லா அரசியல்வாதிகளிடமும் மக்கள் எதிர்பார்க்க வேண்டும், எல்லாரிடமும் இருக்கவும் வேண்டும். அவ்வாறு இருக்கும் படசத்தில்தான் எமது கிராமமும் பிரதேசமும் நாடு நல்வழியில் செல்ல முடியும் சரியான மக்கள் சார்ந்த அபிவிருத்திகள் நடக்கும்.

அது மட்டுமல்ல இவ்வாறு பெண்களின் அரசியல் பிரவேசத்தை கொச்சைப்படுத்துபவர்கள் தற்போது அரசியல் செய்யும் ஆண்கள் தங்கள் அதிகாரத்தால் தவறுகளை மறைப்பது குற்றமில்லையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் சனத்தொகையில் கிட்டதட்ட 52 வீதமானவர்கள் பெண்கள். பணிப்பெண்களாக மத்திய கிழக்கிலிருந்து அந்நிய செலாவணியாக 2014 இல் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் பெற்று தந்துள்ளனர் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக தேயிலை ஏற்றுமதியும்,  ஆடைத்தொழிலும் அந்நிய செலாவணியை இலங்கைக்கு பெற்று தருகின்றது. இம்மூன்று துறைகளும் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகள். இத்துறைகளில் முக்கிய வகிபாகம் வகிப்பவர்கள் எங்கள் பெண்கள் என்பதை மறந்துவிட முடியாது.

மாகாணசபைகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள் இயங்குவதற்கும் மற்றும் பாராளுமன்றம்,  பாராளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாழ்விற்கான நிதிகளுக்கும் செலவுகளுக்கும் இந்த அந்நிய செலாவணியும் வருமானமும் பிரதான பங்கு வகிக்கின்றது.

இவ்வாறு நாட்டின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களின் அரசியல் உரிமையை – அரசியலில் அவளின் பங்களிப்பை மறுப்பதும் கேள்வி கேட்பதும் முட்டுகட்டையாக இருப்பதையும்பெப நினைத்து நாம் எல்லாரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg