Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டசபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் தினகரன்!

In இந்தியா
Updated: 07:52 GMT, Jan 11, 2018 | Published: 07:52 GMT, Jan 11, 2018 |
0 Comments
1147
This post was written by : Kemasiya

தமிழக சட்டசபைக் கூட்டத்தில் இருந்து ஆர்.கே.நகர். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன்


வெளிநடப்புச் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனக்கு உரையாற்ற அனுமதியளிக்கவில்லை எனக் கூறியே தினகரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சி தேர்தல் எப்போது இடம்பெற்றாலும் அதில் போட்டியிட தயாராகவே இருக்கின்றோம் என்றும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் தினகரன் கலந்துகொள்ளும் முதலாவது கூட்டத்தொடர் இதுவாகும். இந்நிலையில், தனக்கு பேசுவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்து தினகரன் இடையிடையே வெளிநடப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg