Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழா

In இந்தியா
Updated: 09:28 GMT, Jan 11, 2018 | Published: 09:28 GMT, Jan 11, 2018 |
0 Comments
1170
This post was written by : Kemasiya

சென்னை மாகாணம் என்ற பெயர் மாறி தமிழ்நாடு என்று பெயர்சூட்டப்பட்ட பின்னர், குறித்த பெயரை பெற்றமைக்கான பொன்விழாவை எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.

ஆந்திரம், கர்நாடகம், கேரளா இணைந்து “பிரசிடன்சி ஆப் மெட்ராஸ்” என ஆங்கிலத்திலும், சென்னை மாகாணம் என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், 1969ஆம் ஆண்டு இப்பெயர் மாறி தமிழ்நாடு என அழைக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் இடப்பட்டு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு குறித் நாளில் தமிழ்நாடு என்னும் பெயர் பொன்விழா காண்பதால், அந்நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

bbn zdcv

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg