Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன, பிரதேசவாத பிரசாரங்களுக்கு கபே அமைப்பு கண்டனம்

In இலங்கை
Updated: 11:21 GMT, Jan 11, 2018 | Published: 09:25 GMT, Jan 11, 2018 |
0 Comments
1164
This post was written by : Elakkiya

இன மற்றும் பிரதேசவாத பிரசாரங்களை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (கபே) தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் வாக்கெடுப்பு சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிதிநிதித்துவம் தொடர்பாக வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டம் வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  “வட.மாகாணத்தில் பெருமளவான இடங்களில் பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள வட்டார ரீதியில் வெற்றி பெற்றாலும் சரி பெறாவிட்டாலும் சரி என்ற மனோபாவத்துடன் தேர்தல் பிரசார வேலைத்திட்டத்தினை ஆண்கள் முன்னெடுத்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு வட்டார ரீதியில் பெண்கள் தெரிவு செய்யப்படாமல் அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் ஆண்கள் மாத்திரம் வெற்றிபெற்றால் மேலதிக பெயர் பட்டியலில் இருந்து பெண்களின் பெயர்கள் மாத்திரமே தெரிவு செய்து அனுப்பக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அச்சந்தர்ப்பத்தில் கட்சியின் செயலாளர் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.

எனவே கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெண்கள் போட்டியிடும் வட்டாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இதேவேளை சில வேட்பாளர்களும் கட்சிகளும் இனரீதியிலான பிரசாரங்களை முன்னெடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இனரீதியாகவோ பிரதேசவாத்தினை தூண்டும் வகையிலோ பிரசாரங்களில் ஈடுபடுவதை கபே அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. இது தொடர்பாக நாம் கண்காணித்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg