Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்ரோன் ஆட்சியில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு: லீ பென்

In ஐரோப்பா
Updated: 09:22 GMT, Jan 11, 2018 | Published: 09:22 GMT, Jan 11, 2018 |
0 Comments
1133
This post was written by : Risha

பிரான்ஸ் தலைவராக இமானுவெல் மக்ரோன் பதவியேற்ற காலம் முதல் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் வலதுசாரி கட்சியின் தலைவர் மரைன் லீ பென் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இயக்கத்தை சேர்ந்த பல ஐ.எஸ் போராளிகள் நாடு திரும்பி வருகின்றமையை சுட்டிக்காட்டி நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சட்டமன்றத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”நாட்டின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் அவசர நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு நிலையை அரசாங்கம் குறைத்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வருகின்ற போதிலும், பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்ததாக இல்லை. இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாட இடமளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg