Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சியை கலைக்குமாறு நானே கோரினேன்! – தினகரன்

In இந்தியா
Updated: 10:45 GMT, Jan 11, 2018 | Published: 10:24 GMT, Jan 11, 2018 |
0 Comments
1206
This post was written by : Kemasiya

“தமிழகத்தின் பெரும்பான்மை இல்லாத ஆட்சியை கலைக்குமாறு கோரி ஆளுநரிடம் நானே மனுத்தாக்கல் செய்தேன்” என    ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழகத்தின் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரியே  தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநரிடம் மனுவை கையளித்ததாக குறிப்பிட்ட தினகரன், எனினும் ஆட்சி மாற்றமே தனது இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற கூட்டத் தொடரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) வெளிநடப்பு செய்த தினகரன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விரைவில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி முடிவுக்கு வருமென்றும்  தினகரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழக அரசின் நாட்காட்டிகளில் பிரதமர் மோடியின் ஒளிப்படம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg