Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுமந்திரனின் பேச்சு நகைப்புக்குரியது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

In இலங்கை
Updated: 10:26 GMT, Jan 11, 2018 | Published: 10:26 GMT, Jan 11, 2018 |
0 Comments
1170
This post was written by : Elakkiya

ஒற்றை  ஆட்சியை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறும்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறுவது நகைப்புக்குரியது என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘ஏக்கிய இராஜ்ய’ என்பதற்கு இணங்கியுள்ளது எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கியுள்ளது என்பதே அதன் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஒற்றை ஆட்சிக்கு இணக்கம் தெரிவித்த பின்னர் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை வென்றெடுப்போம் என்று கூறுவதானது மக்களை மடையர்களாக்கும் கருத்தாகவே அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg