Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

16 வயதுக்குட்பட்டோருக்கு உற்சாக பானம் விற்கக்கூடாது : மரியா கோல்ஃபீல்ட்

In
Updated: 17:20 GMT, Jan 11, 2018 | Published: 10:50 GMT, Jan 11, 2018 |
0 Comments
1202
icon_com
This post was written by : Risha
energy

பிரித்தானியாவில் பதினாறு வயதிற்கு உட்பட்டோருக்கு உற்சாகப் பானங்களை விற்பனை செய்வதனை தடை செய்ய  பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என   கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா கோல்ஃபீல்ட்,   வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

மேலும், தினசரி 15 உற்சாகப் பானங்களை அருந்துவதானது தற்கொலைக்கு காரணமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், பானங்களுக்கான உள்ளடக்கங்கள் பாதுகாப்பானவை என கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் உறுதிபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, இவை 16 வயதிற்குட்பட்டோருக்கு சந்தைப்படுத்தப்படுவதில்லை என்றும் பிரித்தானிய மென்பானச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரபல அங்காடியொன்றில் கஃபைன் உள்ளடக்கப்பட்ட உற்சாகப் பானங்களை கொள்வனது செய்வோர் தொடர்பான ஆய்வை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய, ஒரு லீற்றர் மென்பானத்தில் 150 மில்லிகிராமிற்கு அதிகமான கஃபைன் எனப்படும் புத்துணர்வூட்டும் பொருள் உள்ளடக்கப்பட்டிருப்பின், அதனை கொள்வனவு செய்வோரின் வயதை நிரூபிக்க வலியுறுத்தப்படுவர். இந்நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பல்பொருள் அங்காடி அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)