அபிவிருத்தியை இலக்காக கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்: அங்கஜன்

எதிர்வரும் தேர்தலில் பிரதேச அபிவிருத்தியை இலக்காக கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பிரதேச சபையின் புத்தூர் கிழக்கு வாதரவத்தை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கை சின்னத்திற்கு வாக்குகளை அளித்து உங்கள் பிரதேச வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் நிற்சயம் உங்களுக்கான தீர்வுகள் அபிவிருத்திகள் இலகுவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தல் பிரதேச ரீதியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு உங்கள் பிரதேச அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ள கை சின்னதோடு கைகோர்க்குமாறு தெரிவித்துள்ளார்.