Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

In இலங்கை
Updated: 10:58 GMT, Jan 11, 2018 | Published: 10:58 GMT, Jan 11, 2018 |
0 Comments
1177
This post was written by : Elakkiya

வட.மாகாணத்தில் சந்திக்கு சந்தி கடற்படை முகாம்கள் உள்ள நிலையில் புதிதாக மக்களுடைய காணிகளை அபகரித்து முகாம்களை அமைக்க வேண்டிய தேவை உள்ளதா என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் நிலை தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) யாழ் .ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் முல்லைத்தீவு- வட்டுவாகல் காணி சுவீகரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன்போது, “முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 640 ஏக்கர் காணிகள் கடற்படையினரால் சுவீகரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை தடுப்பதற்கான அழுத்தங்களை பொதுமக்கள் வழங்கி வருகின்ற போதிலும் காணி சுவீகரிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை சகித்துக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களுக்கு எல்லாம் செய்வோம் என கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழத் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்  அது தொடர்பாக கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன்,”இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எமக்கு வழங்கப்படவில்லை. அறிவிப்பு கிடைத்தால், சட்டரீதியாக பேசுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg