Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெஸ்ட் தொடரை இந்தியாவால் வெல்ல முடியாது: தென்னாபிரிக்க வீரர் கணிப்பு

In கிாிக்கட்
Updated: 11:59 GMT, Jan 11, 2018 | Published: 11:59 GMT, Jan 11, 2018 |
0 Comments
1651
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவால் வெல்ல முடியாது என தென்னாபிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லேன்ஸ் குளுஸ்னர் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கேப்டவுன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்ட்யாவின் (95 பந்துகளில் 93 ஓட்டங்கள்) துடுப்பாட்டம் அருமையாக இருந்தது. அவரது அபாரமான துடுப்பாட்டத்தால் இந்தியாவுக்கு இருந்த நெருக்கடி தென்னாபிரிக்க அணியின் பக்கம் திரும்பியது. அவர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரது பந்து வீச்சு வேகம் இன்னும் அதிகரித்தால் உண்மையிலேயே அற்புதமான சகலதுறை வீரராக உருவெடுப்பார்.

முதல் டெஸ்டில் குறைந்த ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தோல்வியை சந்தித்தது. அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து இருக்கும். அந்த போட்டியில் இருந்து இந்திய அணி நிறைய கற்று இருக்கும். உண்மையை சொல்லப்போனால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது என்பதே எனது கணிப்பாகும். 1-1 என்ற கணக்கில் தொடரை முடித்தால் அது இந்திய அணிக்கு நல்ல முடிவாகும். ஆனால் அதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg