Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் வித்யா பாலன்!!

In சினிமா
Published: 11:52 GMT, Jan 11, 2018 |
0 Comments
1034
icon_com
This post was written by : Arul Jesu
Vidya-balan-1

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ் தெரிவித்துள்ளார்.

பதினாறு ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு ஒக்டோபர் 31இல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சீக்கிய பாதுகாவலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், நூல் ஒன்றை எழுதியிருந்தார்.

‘இந்திரா இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற இந்த நூலின் கதையை திரைப்படமாக்கும் உரிமையை  ராய் கபூர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வித்யா பாலன் வாங்கியுள்ளார். இவர், பிரபல கவர்ச்சி நடிகை மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ‘டேர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

201801101957599705_1_Vidya-3._L_styvpf

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)