Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரண விசாரணை: சசிகலாவின் சட்டத்தரணிக்கு அழைப்பு

In இந்தியா
Updated: 12:21 GMT, Jan 11, 2018 | Published: 12:21 GMT, Jan 11, 2018 |
0 Comments
1163
This post was written by : Kemasiya

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு பதிலாக அவரது சட்டத்தரணி செந்தூர்பாண்டியன் நாளை ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை ஆணையகம் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி சசிகலாவிற்கு அனுப்பிய நோட்டீஸின் மூலமே இவ் அறிவித்தலை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதி சசிகலாவிற்கு விசாரணை ஆணையகம் அனுப்பிய மனுவில் சசிகலா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறி அவரின் சட்டத்தரணி கடந்த 5ஆம் திகதி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சசிகலா மீது குற்றம் சுமத்தியவர்கள் யார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சட்டத்தரணி செந்தூர்பாண்டியனை நாளை விசாரணைக்காக ஆஜராகுமாறு ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg