Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி ஜனாதிபதியை ரோமில் சந்தித்தார் மக்ரோன்

In ஐரோப்பா
Updated: 11:56 GMT, Jan 11, 2018 | Published: 11:56 GMT, Jan 11, 2018 |
0 Comments
1125
This post was written by : Risha

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், இத்தாலி ஜனாதிபதி சேர்ஜியோ மேட்டரெல்லாவை இன்று (வியாழக்கிழமை) ரோமில் சந்தித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் இத்தாலிக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் ஒரு அங்கமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எனினும், குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

2018ஆம் ஆண்டிற்கான முதலீடுகள், வளர்ச்சி மற்றும் குடியேற்றவாசிகள் ஆகிய விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கும் வகையில் தெற்கு ஐரோப்பிய ஒன்றிய மாநிலங்களின் தலைவர்களுடனான மாநாடொன்றில் கலந்துக் கொள்வதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று இத்தாலிக்கு விஜயம் செய்தார்.

இத்தாலி ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து, மக்ரோன் இத்தாலி பிரதமரை சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பை தொடர்ந்து இருவரும் கூட்டாக ஊடகங்களை சந்திப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg