Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிக்கோ செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை!

In கனடா
Updated: 12:24 GMT, Jan 11, 2018 | Published: 12:24 GMT, Jan 11, 2018 |
0 Comments
1094
This post was written by : Anojkiyan

மெக்சிக்கோவின் வட எல்லைப் பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள், அவதானமாக இருக்குமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த பிராந்தியங்களில் அதிக அளவிலான குற்றச் செயலகள் இடம்பெறுவதாகவும், அது தவிர அங்கு பல்வேறு பேரணிகள் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும், அவ்வப்போது நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கனேடியர்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் அன்றி, மெக்சிக்கோவுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறும், அவ்வாறு பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதிக அளவிலான அவதானத்துடன் செயற்படுமாறும் கனேடிய மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அந்த பயண எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மெக்சிக்கோவுக்கு செல்ல வேண்டிய அவசிய தேவை உள்ளோர் தரை மார்க்கமாக எல்லை நகரங்கள் ஊடாக பயணிப்பதைத் தவிர்த்து, வான் மார்க்கமாக பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு செல்வோர், அந்தந்தப் பகுதிகளில் உணவு, பாணங்கள், சிற்றூண்டிகள் போன்ற நுகர்வுப் பொருட்களை பெற்று உட்கொள்வதிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அந்த பயண எச்சரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg