Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணை முறி மோசடியாளர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை! – சுசில்

In இலங்கை
Published: 12:11 GMT, Jan 11, 2018 |
0 Comments
1181
This post was written by : Varshini

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்கள், குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுக்கல் வாங்கலின் போது மோசடி செய்யப்பட்ட பணம் மீள வழங்கப்பட்டாலும்கூட, இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க மாட்டார்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிணை முறி குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சில முக்கிய சாட்சியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் சுசில், அவற்றை ரகசியமாக பாதுகாப்பது அவசியம் என சுட்டிக்காட்டினார். மிகவும் முக்கியமான இந்த தடயங்களை அழித்து, குற்றவாளிகள் தப்பிப்பதற்கு இடமளிக்க கூடாதென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிணை முறி விவகாரம் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த கோப் குழுவினால் கண்டறிய முடியாத பல விடயங்களையும் ஜனாதிபதி ஆணைக்குழு மிக துல்லியமாக விசாரித்து கண்டறிந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)