Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி விவகாரத்தை தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி: ரவூப் ஹக்கீம்

In இலங்கை
Updated: 12:53 GMT, Jan 11, 2018 | Published: 12:53 GMT, Jan 11, 2018 |
0 Comments
1127
This post was written by : Vithushagan

உள்ளூராட்சி தேர்தல் நடை பெறவிருப்பதால் பிணைமுறி விவகாரத்தை ஒவ்வொருவரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிணைமுறி விவகாரம் தொடர்பில் மக்கள மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிணைமுறி விநியோக சர்ச்சை குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக நேற்று ( புதன்கிழமை) நாடாளுமன்றம் விசேடமாக கூடிய போது ஆளும் கட்சி எதிர்கட்சியினருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களில் ஒரு சில பிரிவுகள் ஊடகங்களின் ஊடாக வெளியாகியுள்ளன.

இவை மக்களுக்குச் சென்றடைந்துள்ள நிலையில், தேர்தலை இலக்குவைத்து பிணைமுறி விவகாரத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த சிலர் முயட்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தில் ஆட்சியை அமைப்பதற்கான தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில் சிலர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்கள் என சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg