Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல்வாதிகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கே அவமானம் – சுசில் பிரேமஜயந்த

In இலங்கை
Published: 13:03 GMT, Jan 11, 2018 |
0 Comments
1221
This post was written by : Varshini

நாடாளுமன்றில் நேற்றைய தினம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் நடந்துகொண்ட விதமானது, இலங்கையின் அரசியல் கலாசாரத்திற்கே இழுக்கு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிணை முறி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை எப்போது நடத்துவதென, குறித்த விவாதத்தை கோரிய கட்சித் தலைவர்களுடன் முன்கூட்டியே கலந்துரையாடி தீர்மானித்திருந்தால் நேற்றைய குழப்பத்தை தவிர்த்திருக்கலாமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நேற்றைய குழப்பத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென குறிப்பிட்ட அமைச்சர் சுசில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களே நேற்றைய தினம் நாடாளுமன்றில் இருந்ததாகவும் ஏனையவர்கள் அநுராதபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இருந்த குறித்த மூவரும் யாரையும் பார்த்து ‘திருடன் திருடன்’ என கூச்சலிடவில்லையென்றும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில், இச்சம்பவம் தொடர்பில் சுதந்திரக் கட்சி மீது குற்றஞ்சாட்ட முடியாதென்றும், இச்சம்பவத்திற்கும் சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)