Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

In இலங்கை
Published: 14:14 GMT, Jan 11, 2018 |
0 Comments
1167
This post was written by : Vithushagan
Tas_1_03218

மதுபான விற்பனை நிலையங்களில் மது விற்பனைசெய்யும் நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில்,  இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைத்திருக்க முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும், மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்கும்  விதிக்கப்பட்டிருந்த தடையையும் அண்மையில் அரசாங்கம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மது ஒழிப்பு, போதைக்கு முற்றுப் புள்ளி என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான மதுப் பாவனையை தூண்டும் விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்ட உரையில் பியர் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருந்த நடவடிக்கைக்கு பாரிய எதிர்ப்பலைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)