Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை வழக்கு ஒத்தி வைப்பு!

In இலங்கை
Published: 15:21 GMT, Jan 11, 2018 |
0 Comments
1078
This post was written by : Vithushagan
court-newsfirst5-626x380
சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பபான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் 16 இராணுவத்தினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் கடந்த 1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் 16 இராணுவத்தினருக்கும் பிணை வழங்கியது.
அதன் பின்னர் வழக்கு விசாரணைகள் இன்றி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபரால் 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் மீள குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஏனைய 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 
 
பின்னர் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 9 இராணுவத்தினர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏனைய 5 இராணுவத்தினருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் பிணை வழங்கியது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் 5 பேரும் மன்றில் முன்னிலையாகினர். 

குறித்த வழக்கை முன்னெடுப்பதற்கு மன்னார் மாவட்ட அரச சட்டவாதி சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றலாகிச் சென்றுள்ளார். அதனால் வேறொரு அரச சட்டவாதியை விரைவில் நியமிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது. 
 
எனவே வழக்கு விசாரணையை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அச்சுவேலி பொலிஸார் மன்றில் விண்ணப்ம் செய்தனர். 

பொலிஸாரின் விண்ணப்பத்தையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை ஒத்தி வைக்கபப்ட்டது. 
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)