Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதவிக்காலம் குறித்து அறியவே ஜனாதிபதி நீதிமன்றத்தை நாடினார்!

In இலங்கை
Updated: 16:57 GMT, Jan 11, 2018 | Published: 16:57 GMT, Jan 11, 2018 |
0 Comments
1096
This post was written by : Vithushagan

தனது பதவிக்காலம் குறித்து தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள் சட்டம், சிவில் மற்றும் அரசியல் துறைகளில் நிலவுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள விளக்கம் கோருவதற்கான அதிகாரத்தை வைத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விளக்கத்தைக் கோரியுள்ளார்.

இதற்கு முன்னர் பதவிவகித்த ஜனாதிபதிகளும் தமது பதவிக்காலம் தொடர்பாக இவ்வாறு உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்ததாகவும்  ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg