Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். பல்கலை மோதல் எதிரொலி: மாணவர்கள் உட்பிரவேசிக்க தடை

In இலங்கை
Published: 02:39 GMT, Jan 12, 2018 |
0 Comments
1124
This post was written by : Risha

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலின் எதிரொலியாக, பல்கலைக்கழகத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு மறுஅறிவித்தல் வரும்வரை தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த கலைபீட மாணவர்கள் நால்வரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் தப்பிச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, மாணவர்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)