Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது!

In இந்தியா
Updated: 03:52 GMT, Jan 12, 2018 | Published: 03:52 GMT, Jan 12, 2018 |
0 Comments
1159
This post was written by : Arul Jesu

தமிழக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் பேரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 நாட்களாக இந்தப்போராட்டம் நடைபெற்றிருந்தது.

இதுதொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக அரச தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மட்டும் தான் வழக்கு தொடரப்பட்டது என நீதிபதிகள் கூறியதை தொடர்ந்து, போராட்ட காலத்திற்கான ஊதியம், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் நீண்ட ஆலோசனை நடத்திய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலை முதல் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் சேவையில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg