Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய இளைஞர் தினத்தில் விவேகானந்தரை கௌரவித்தார் மோடி!

In இந்தியா
Updated: 06:49 GMT, Jan 12, 2018 | Published: 04:31 GMT, Jan 12, 2018 |
0 Comments
1130
This post was written by : Arul Jesu

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று (வெள்ளிக்கிழமை) விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ஆம் திகதியை, தேசிய இளைஞர் தினமாக இந்திய மத்திய அரசு 1984ஆம் ஆண்டு அறிவித்தது.

எனவே, இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தவர் சுவாமி விவேகானந்தர். ‘நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள், இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்’ என்று கூறிய அவரது பிறந்த தினமான ஜனவரி 12ஆம் திகதி தேசிய இளைஞர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி தலைவர்கள் விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ‘சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு நான் அவரை வணங்குகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்’ என மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg