Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியின் மாற்றம் முட்டாள்தனமானது: ஆலன் டொனால்ட்

In விளையாட்டு
Published: 04:57 GMT, Jan 12, 2018 |
0 Comments
1656
This post was written by : Vithushagan
201801111738410676_South-Africa-will-be-happy-Ajinjkya-Rahane-on-the-bench-_SECVPF

இந்திய அணியில் அதிக மாற்றம் கொண்டு வந்தால் அது முட்டாள்தனமானதாகும் என தென்ஆபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் தென்ஆபிரிக்க அணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘‘தவான் உண்மையிலேயே ஆக்ரோசமான வீரராக நான் கருதுகிறேன். ஒருவேளை இந்திய அணி அவரை மாற்றினால், தென்ஆபிரிக்கா அணி அந்த முடிவை சரியானது என்றே நம்பும். தவான் மாற்றம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். தவான் உலகத்தரம் வாய்ந்த வீரர்.

அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். ஒரு அதிரடி வீரர் என்பதால், பந்து வீச்சாளர்களின் லெந்த்-ஐ மாற்றக்கூடியவர்.

ரகானே அணியில் இடம்பிடிக்காதது மிகவும் கடினமானது என நான் நினைக்கிறேன். கடந்த வரும் இந்திய அணி தென்ஆபிரிக்கா வந்தபோது ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கப்பலை நிலையாக வைத்திருக்க ரகானேயால் முடியும் என்பது எனது பார்வை. அவர் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்.

என்னுடைய பார்வையில் ஆரம்ப வீரர்களில் மாற்றம் கொண்டு வந்தால், தென்ஆப்பிரிக்கா அணி அது சரி என்று ஏற்றுக்கொள்ளும். ராகுலுக்குப் பதிலாக தவானை அணியில் சேர்த்தால் சிறந்ததாக நினைக்கும்.

ஏனென்றால் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். 2ஆவது போட்டியில் தவானை கட்டாயம் களமிறக்க வேண்டும்.

இந்திய அணியில் அதிக மாற்றம் கொண்டு வந்தால் அது முட்டாள்தனமானதாகும். அதேவேளையில் ரகானே 12ஆவது வீரராக இருந்து தண்ணீர்  சுமந்து வந்தால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு அது சந்தோசத்தை கொடுக்கும். ரகானே உலகத்தரம் வாய்ந்த வீரர்’’ என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)