Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது!

In இந்தியா
Updated: 05:05 GMT, Jan 12, 2018 | Published: 05:05 GMT, Jan 12, 2018 |
0 Comments
1387
This post was written by : Arul Jesu

இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று (வெள்ளிக்கிழமை) பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்தவகையில் தொலைதூர உணர்திறன் கொண்ட செயற்கைக்கோள் ‘கார்ட்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த ‘இஸ்ரோ’ முடிவெடுத்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஷ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த முடிவெடுத்த ‘இஸ்ரோ’ அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இதன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து காலை 9:28 மணிக்கு, 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-40 விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2, பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்து குறித்த தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg