Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

In
Updated: 03:13 GMT, Jan 14, 2018 | Published: 04:58 GMT, Jan 12, 2018 |
0 Comments
1028
This post was written by : srikkanth

தேர்தல் மேடைகளில் என்னதான் வீராப்பு பேசினாலும் வடக்கு கிழக்கு பிரதான கட்சிக்காரர் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்கின்றார்கள் என்பது தெரிகிறது.

“எங்களுக்கு வோட்டுப் போடாவிட்டால் தொலைஞ்சியள்” என்ற ரேஞ்சில் அந்தக் கட்சியின் பேச்சாளரின் அண்மைக்கால பிரச்சார பேச்சுக்கள் அமைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமல்ல, குறித்த கட்சியின் உள்ளுர் தலைவர்கள், ஏனைய சின்னங்களில் போட்டியிடுகின்ற சமூக பிரபலங்களிடம் டீல் போடவும் ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, சில லட்சங்ளை சன்மானமாகப் பெற்றுக் கொண்டு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்திருக்கின்ற ஒருசில பிரபலங்கள் ‘டோன்ற் வொறி வெண்டா பிறகு பேசுவம்’ எண்டு சமிக்கை குடுத்திருப்பதாகவும் தகவல்…!

தேசியம்.. சமஷ்டி… வடக்கு கிழக்கு இணைப்பு.. எண்டு நாளும் பொழுதும் மூளையை கசக்கிக் கொண்டிருக்கையில், அத்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்வதற்கான வேலைகள் நாசுக்காக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன..

தமிழர் தரப்பு, பூர்வீக தாயகப் பிரதேசங்கள் எண்டு பெருமை பேசிக் கொண்டிருக்கின்ற இடங்களில் இருக்கின்ற அரசாங்க வேலைவாய்ப்புக்கள் தென்னிலங்கை இளைஞர் யுவதிகளினால் நிரப்பப்படுகின்றன.

அந்தவகையில், இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி காரியாலயத்திற்கு சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட தென்னிலங்கை இளைஞர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் நல்லிணக்கத்தின் அடிப்படைகள் எனப் பொருள்கோடல் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…!

தனித்து நிற்க துப்பில்லாமலுக்கு யானையோடு முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு வைச்சு கிழக்கில் தேர்தலை எதிர்கொள்வதாக அமைச்சர் றிஷாத் குமுறியிருக்கின்றார்.

ஆனால், அதே அமைச்சருடைய கட்சி வடக்கில் யானையின் முதுகில் சவாரி செய்கின்றது என்பதுதான் வேடிக்கை..! குறிப்பாக கணிசமான முஸ்லீம் வாக்குகளைக் கொண்ட யாழ். மாநகர சபையில்கூட யானை மீதுதான் நடக்கிறது சவாரி…

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)