Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா மீதான தடைகளை நீக்குவது குறித்து ஐ.நா. கவனம்

In உலகம்
Published: 05:07 GMT, Jan 12, 2018 |
0 Comments
1164
This post was written by : Risha

சிரியா மீதான பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐ.நா மனித உரிமைகள் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பிற்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் தெரிவித்துள்ளார்.

டமஸ்கஸில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்கு உட்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தலைவிதி குறித்து கவலை வெளியிட்ட அவர், சிரியா மீதான பொருளாதார தடைகளை அகற்ற வேண்டும் என்பது அம்மக்களின் தேவையாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

எனவே, சிரியா மீதான தடைகளை நீக்குவதற்கு உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தன்னால் முடிந்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மார்க், குறித்த பதவியை பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அண்மையில் சிரியாவின் ஹோம்ஸ் உள்ளிட்ட நகர்களுக்கு விஜயம் மேற்கொண்டு, மனிதாபிமான நிலைமைகள் மற்றும் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஐ.நா. நிகழ்ச்சித்திட்டங்களின் நிலை ஆகியன குறித்து ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)